கணினியின் கூறுகள்

கணினி பல முக்கிய கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூறுகள் அனைத்தும் இணைந்து செயல்படும் போது தான் கணினி முழுமையாக வேலை செய்கிறது. கணினியின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:


1. உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices)

பயனர், தரவு மற்றும் கட்டளைகளை கணினிக்குள் வழங்க உதவும் சாதனங்கள் உள்ளீட்டு சாதனங்கள் எனப்படுகின்றன.

உதாரணங்கள்:

  • விசைப்பலகை (Keyboard)
  • சுட்டி (Mouse)
  • ஸ்கேனர் (Scanner)
  • மைக்ரோஃபோன் (Microphone)
  • வெப் கேம் (Webcam)

இச்சாதனங்கள் மூலம் தரவு கணினிக்குள் அனுப்பப்படுகிறது.


2. வெளியீட்டு சாதனங்கள் (Output Devices)

கணினியால் முறைவழிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடும் சாதனங்கள் வெளியீட்டுச் சாதனங்கள் எனப்படுகின்றன.

உதாரணங்கள்:

  • மானிட்டர் (Monitor)
  • அச்சுப்பொறி (Printer)
  • ஸ்பீக்கர் (Speaker)
  • புரொஜெக்டர் (Projector)

இவை கணினி வழங்கும் முடிவுகளை காண்பிக்கும்.


3. மையமுறைவழி அலகு (Central Processing Unit – CPU)

CPU என்பது கணினியின் மூளை ஆகும். இது அனைத்து கணக்கீடுகளையும் மற்றும் கட்டளைகளையும் செயற்படுத்துக்கின்றது.

CPU மூன்று பகுதிகளை கொண்டுள்ளது:

  • எண்கணித மற்றும் தர்க்க அலகு (ALU) – கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற கணித மற்றும் தர்க்க செயல்பாடுகள்
  • கட்டுப்பாட்டு அலகு (Control Unit) – அனைத்து கூறுகளையும் கட்டுப்படுத்துகிறது
  • நினைவகப் பதிவகங்கள் (Memory Registers) – தற்காலிக நினைவகம்

4. முதன்மை நினைவகம் (Main Memory)

கணினி தற்போது செயல்படுத்தும் தரவுகளை தற்காலிகமாக சேமிக்கும் நினைவகம் முதன்மை நினைவகம் எனப்படுகிறது.

வகைகள்:

  • RAM (Random Access Memory)
  • ROM (Read Only Memory)

RAM தற்காலிக நினைவகம்; ROM நிரந்தர நினைவகம் ஆகும்.


5. சேமிப்பு சாதனங்கள் (Storage Devices)

தரவுகளை நீண்ட காலத்திற்கு சேமிக்க பயன்படும் சாதனங்கள் சேமிப்பு சாதனங்கள் ஆகும்.

உதாரணங்கள்:

  • Hard Disk
  • SSD
  • Pen Drive
  • CD / DVD
  • External Hard Disk

இவை தரவுகளை பாதுகாப்பாக சேமிக்க உதவுகின்றன.


6. தொடர்பாடல் சாதனங்கள் (Communication Devices)

கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் சாதனங்கள் தொடர்பாடல் சாதனங்கள் எனப்படுகின்றன.

உதாரணங்கள்:

  • மோடம் (Modem)
  • ரவுட்டர் (Router)
  • நெட்வொர்க் கேபிள்
  • Wi-Fi Adapter
  • Bluetooth

இவை இணையம் மற்றும் நெட்வொர்க் மூலம் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top