கணினி தலைமுறைகள் என்றால் என்ன?
கணினிகளின் வளர்ச்சியை காலகட்டங்களாக பிரித்து விளக்கும் முறையே கணினி தலைமுறைகள் ஆகும்.
ஒவ்வொரு தலைமுறையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
முதலாம் தலைமுறைக் கணினிகள் (1940–1956)
முதலாம் தலைமுறைக் கணினிகள் வெற்றிட குழாய்களைப் (Vaccum Tubes) பயன்படுத்தி உருவாக்கப்பட்டன.
இவை மிகப்பெரிய அளவில் இருந்ததுடன் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தின.
உதாரணம்: ENIAC, UNIVAC
இரண்டாம் தலைமுறைக் கணினிகள் (1956–1963)
இரண்டாம் தலைமுறையில் டிரான்சிஸ்டர்கள்(Second Generations) பயன்படுத்தப்பட்டன.
இது ஒப்பீட்டளவில் முதலம் தலைமுறைக் கணினிகளை விட சிறியதாகவும் வேகமானதாகவும் இயங்கியது.
உதாரணம்: IBM 1401
மூன்றாம் தலைமுறைக் கணினிகள் (1964–1971)
இந்த தலைமுறைக் கணினிகளில் ஒருங்கிணைந்த சுற்று Integrated Circuit ( IC ) பயன்படுத்தப்பட்டதால் கணினிகள் மேலும் சிறியதாகவும் நம்பகமானதாகவும் மாறின.
உதாரணம்: IBM System 360
நான்காம் தலைமுறைக் கணினிகள் (1971–இன்றுவரை)
நுண்முறைவழியாக்கி (Micro Processor) அறிமுகம் செய்யப்பட்டமையானது இந்த தலைமுறையின் முக்கிய அம்சமாகும். மேலும் தனிப்பட்ட கணினிகள் (Personal Computers) பரவலாக பயன்பாட்டில் வந்தன.
உதாரணம்: IBM PC
ஐந்தாம் தலைமுறை கணினிகள் (இன்றும் எதிர்காலமும்)
இந்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர வழிக் கற்றல்(Machine Learning)போன்ற தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது.
உதாரணம்: AI Systems, Robotics
கணினி தலைமுறைகள் – Quiz
- முதல் தலைமுறை கணினிகளில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தொழில்நுட்பம் எது?
A. Transistor
B. IC
C. Vacuum Tube
D. Microprocessor
Answer: C. Vacuum Tube - டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்பட்ட கணினி தலைமுறை எது?
A. முதல் தலைமுறை
B. இரண்டாம் தலைமுறை
C. மூன்றாம் தலைமுறை
D. நான்காம் தலைமுறை
Answer: B. இரண்டாம் தலைமுறை - Integrated Circuit (IC) அறிமுகமான தலைமுறை எது?
A. முதல் தலைமுறை
B. இரண்டாம் தலைமுறை
C. மூன்றாம் தலைமுறை
D. ஐந்தாம் தலைமுறை
Answer: C. மூன்றாம் தலைமுறை - Microprocessor பயன்படுத்தப்பட்ட தலைமுறை எது?
A. இரண்டாம் தலைமுறை
B. மூன்றாம் தலைமுறை
C. நான்காம் தலைமுறை
D. ஐந்தாம் தலைமுறை
Answer: C. நான்காம் தலைமுறை - ENIAC கணினி எந்த தலைமுறையைச் சேர்ந்தது?
A. முதல் தலைமுறை
B. இரண்டாம் தலைமுறை
C. மூன்றாம் தலைமுறை
D. நான்காம் தலைமுறை
Answer: A. முதல் தலைமுறை - IBM System 360 எந்த தலைமுறையைச் சேர்ந்தது?
A. இரண்டாம் தலைமுறை
B. மூன்றாம் தலைமுறை
C. நான்காம் தலைமுறை
D. ஐந்தாம் தலைமுறை
Answer: D. மூன்றாம் தலைமுறை - தனிப்பட்ட கணினிகள் (PC) எந்த தலைமுறையில் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது?
A. முதல் தலைமுறை
B. இரண்டாம் தலைமுறை
C. மூன்றாம் தலைமுறை
D. நான்காம் தலைமுறை
Answer: D. நான்காம் தலைமுறை - அதிக மின்சாரம் பயன்படுத்திய கணினிகள் எந்த தலைமுறையைச் சேர்ந்தது?
A. முதல் தலைமுறை
B. மூன்றாம் தலைமுறை
C. நான்காம் தலைமுறை
D. ஐந்தாம் தலைமுறை
Answer: A. முதல் தலைமுறை - செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கணினிகள் எந்த தலைமுறையை குறிக்கின்றன?
A. மூன்றாம் தலைமுறை
B. நான்காம் தலைமுறை
C. ஐந்தாம் தலைமுறை
D. இரண்டாம் தலைமுறை
Answer: C ஐந்தாம் தலைமுறை - கணினி தலைமுறைகள் எதை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன?
A.விலை
B. அளவு
C. தொழில்நுட்ப வளர்ச்சி
D. நிறம்
Answer: C. தொழில்நுட்ப வளர்ச்சி

Leave a Reply