1. வெற்றிட குழாய்கள் பயன்படுத்தப்பட்டன
- முதல் தலைமுறை கணினிகள் 1940 முதல் 1956 வரை பயன்படுத்தப்பட்டன.
- இந்த கணினிகளில் வெற்றிட குழாய்கள்( Vacuum Tubes ) என்ற மின்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
- ஒரு கணினியில் ஆயிரக்கணக்கான குழாய்கள் இருந்தன. சுமார் (17,468 – 18000)
2 மிகவும் பெரிய அளவு
- கணினி ஒரு அறை முழுவதும் இடம் பிடித்தது.
- ஒரு மேசையில் வைக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருந்தது.
3. அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.
- இக்கணினிகள் இயங்குவதற்கு அதிக மின்சாரம் தேவைப்பட்டது.
4. அதிக வெப்பம் உண்டாக்கியது
- அண்ணளவாக சுமார் 18000 வெற்றிடக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக வேலை செய்யும் போது மிகவும் சூடானது.
- எனவே இதனைத் தடுக்க குளிர்ச்சியாக்கல் முறைமை எனும் அலகு அவசியமாக இருந்தது.
5. மெதுவான செயல்பாடு
- கணக்குகளை செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
6. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது
- அதாவது கணினியால் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய இயந்திர மொழியாகிய 0 மற்றும் 1 (Machine Language) மூலம் மட்டுமே செயல்பட்டது.
7. விலை உயர்ந்தது
- வாங்கவும் பராமரிக்கவும் மிகவும் செலவாக இருந்தது.
இத்தலைமுறையில் பயன்படுத்தப்பட்ட வெற்றிடக் குழாய்களின் குறைகள் பின்வருவமாறு
- அதிக செலவு
- அடிக்கடி பழுதடைந்தது
- அதிக வெப்பம் காரணமாக கோளாறுகள் ஏற்பட்டன
முதலாம் தலைமை கணினிகளுக்கு உதாரணங்கள்
- ENIAC (Electronic Numerical Integrator and Computer)
- UNIVAC
