வெளியீட்டுச் சாதனங்கள் (Output Devices)

வெளியீட்டுச் சாதனங்கள் என்றால் என்ன?

கணினி செயலாக்கிய (Process செய்த) தகவலை பயனருக்கு வெளியீடு செய்த உதவும் சாதனங்கள் வெளியீட்டுச் சாதனங்கள் எனப்படுகின்றன.

பயனர் வழங்கிய உள்ளீட்டுத் தகவல் மைய செயலாக்க அலகு (CPU) மூலம் செயலாக்கப்பட்ட பின், அதன் முடிவுகளை காண்பிக்க அல்லது கேட்க உதவும் கருவிகளே வெளியீட்டுச் சாதனங்கள் ஆகும்.

எளிமையாகச் சொன்னால்,
கணினியின் பதிலை நமக்கு காட்டும் சாதனங்கள் வெளியீட்டுச் சாதனங்கள் ஆகும்.


வெளியீட்டுச் சாதனங்களின் முக்கியத்துவம்

  • செயலாக்கப்பட்ட தகவலை பயனருக்கு வழங்குகின்றன
  • கணினியின் செயல்பாடு சரியாக நடந்ததா என்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன
  • தகவலை காட்சி (Visual), ஒலி (Audio) அல்லது அச்சு (Print) வடிவில் வெளிப்படுத்துகின்றன

முக்கிய வெளியீட்டுச் சாதனங்கள்

1. தெரிவிப்பி (Monitor)

தெரிவிப்பி கணினியின் மிகவும் முக்கியமான வெளியீட்டுச் சாதனம் ஆகும்.
இது எழுத்துகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை திரையில் காட்டுகிறது.

LCD, LED போன்ற வகை தெரிவிப்பிகள் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.


2. அச்சுப்பொறி (Printer)

கணினியில் உள்ள தகவலை காகிதத்தில் அச்சிட்டு வழங்கும் சாதனம் அச்சுப்பொறி ஆகும்.

அச்சுப்பொறி வகைகள்:

  • Inkjet Printer
  • Laser Printer
  • Dot Matrix Printer

3. ஸ்பீக்கர் (Speaker)

ஒலியை வெளிப்படுத்தும் சாதனம் ஸ்பீக்கர் ஆகும்.
இசை, வீடியோ, ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றில் இது பயன்படுகிறது.


4. ஹெட்போன் (Headphone)

தனிப்பட்ட முறையில் ஒலி கேட்க பயன்படும் சாதனம் ஹெட்போன் ஆகும்.
இது ஸ்பீக்கரின் மாற்று சாதனமாகும்.


5. புரொஜெக்டர் (Projector)

கணினியில் உள்ள தகவலை பெரிய திரையில் காட்ட பயன்படும் சாதனம் புரொஜெக்டர் ஆகும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கூட்டரங்குகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.


6. ப்ளாட்டர் (Plotter)

பெரிய அளவிலான வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை அச்சிட பயன்படும் சிறப்பு வெளியீட்டுச் சாதனம் ப்ளாட்டர் ஆகும்.
பொதுவாக பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top