உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices)

உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices)


உள்ளீட்டு சாதனங்கள் என்பது கணினிக்கு இன்றியமையாத ஒன்றாகும். மனிதன் உள்ளிடும், தகவல்கள், கட்டளைகள், எழுத்துக்கள், படங்கள், ஒலி போன்ற அனைத்தும் உள்ளீட்டு சாதனங்கள் மூலமாகவே கணினிக்குள் செல்கின்றன.

இதன்படி உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன, அவற்றின் வகைகள், உள்ளீட்டு சாதனத்தின் பயன்பாடுகள், நன்மைகள் மற்றும் நவீன உள்ளீட்டு சாதனங்கள் பற்றிய விரிவான விடயங்களைக் கவனிப்போம்.

உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன?


பயனர் கணினிக்கு தரவு அல்லது கட்டளைகளை வழங்க பயன்படும் வன்பொருள் (Hardware) சாதனங்கள் உள்ளீட்டு சாதனங்களாகும்.

கணினியினால் சுயமாக செயல்பட முடியாது. மனிதன் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கணினி செயல்படுகிறது.

அந்த தகவல்களை கணினிக்குள் அனுப்பும் தொடர்புப் பாலமாக உள்ளீட்டு சாதனங்கள் செயல்படுகின்றன.

உள்ளீட்டு சாதனங்களின் முக்கியத்துவம் உள்ளீட்டு சாதனங்கள் இல்லாமல் கணினியை பயன்படுத்த முடியாது.
ஒரு கணினி எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், உள்ளீட்டு சாதனங்கள் இல்லையெனில் அது பயனற்றதாகிவிடும்.

கல்வி, வணிகம், மருத்துவம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் உள்ளீட்டு சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உள்ளீட்டு சாதனங்களின் வகைகள்

உள்ளீட்டு சாதனங்களை பல வகைகளாக பிரிக்கலாம்.

  1. உரை(Text) உள்ளீட்டு சாதனங்கள்
  2. சுட்டும் (Pointing) சாதனங்கள்
  3. ஒலி உள்ளீட்டு சாதனங்கள்
  4. பட மற்றும் காட்சி உள்ளீட்டு சாதனங்கள்
  5. நவீன உள்ளீட்டு சாதனங்கள்

சாவிப்பலகை (Keyboard)
சாவிப்பலகை என்பது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் உள்ளீட்டு சாதனமாகும்.
எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் மற்றும் கட்டளைகளை கணினியில் உள்ளிட சாவிப்பலகை பயன்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் தட்டச்சு செய்ய சாவிப்பலகை உதவுகிறது.

சாவிப்பலகையின் முக்கிய சாவிகள்

  1. Alphabet Keys
  2. Number Keys
  3. Function Keys
  4. Control Keys
  5. Navigation Keys.

சுட்டி (Mouse)
சுட்டி என்பது ஒரு சுட்டும் சாதனம் (Pointing Device) ஆகும்.
திரையில் உள்ள பொருட்களை தெரிவுசெய்ய, நகர்த்த, திறக்க சுட்டி பயன்படுகிறது.
Desktop மற்றும் Laptop கணினிகளில் இது மிக முக்கியமான சாதனமாகும்.

வருடி (Scanner)
வருடி என்பது காகிதத்தில் உள்ள உரை அல்லது படங்களை இலத்திரனியல் (Digital) வடிவமாக மாற்ற பயன்படும் உள்ளீட்டு சாதனமாகும்.
பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஒலிவாங்கி (Microphone)
ஒலிவாங்கி என்பது ஒலியை உள்ளீடாக வழங்க பயன்படும் சாதனமாகும்.
Online classes, voice recording, video calls, AI voice assistants  போன்றவற்றுக்காக ஒலிவாங்கி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இணையப்படக் கருவி (Web Camera)
இணையப்படக் கருவி என்பது படங்களை மற்றும் வீடியோக்களை கணினிக்குள் உள்ளிட பயன்படும் சாதனம்.
Youtube மற்றும் Online (நிகழ்நிலை) வகுப்புகள் போன்றவற்றில் காணொளியுடனான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் நிழற்பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவும் இணையப்படக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இயக்குப்பிடி (Joystick)
இயக்குப்பிடி என்பது விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு சாதனமாகும்.
விளையாட்டு அசைவுகளை(Game movements) கட்டுப்படுத்த இது உதவுகிறது. அதாவது முன்னோக்கி, பின்னோக்கி நகர்தல் போன்ற பல செயற்பாடுகளுக்கு இயக்குப்பிடி எனும் இவ் உள்ளீட்டு சாதனம் அதிகம் பயன்படுகிறது.

ஒளிப்பேனா (Light Pen)
ஒளிப்பேனா என்பது திரையில்(Screen) நேரடியாக எழுத அல்லது வரைய பயன்படும் சாதனமாகும்.Design மற்றும் drawing பணிகளில் இது பயன்படுகிறது.

தொடு திரை (Touch Screen)
தொடு திரை என்பது உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டாகவும் செயல்படக்கூடிய ஒன்றாகும்.

செல்லிடத் தொலைபேசிகள் (Mobile Phones), ATM பொறி, Tablet போன்றவற்றில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

உயிரளவியல் சாதனங்கள் (Biometric Devices)
Fingerprint scanner, Iris scanner, Face recognition போன்றவை பாதுகாப்பு நோக்கில் பயன்படுத்தப்படும் நவீன உள்ளீட்டு சாதனங்களாகும்.

இது மனிதனின் உயிர்ப்பொருள்களாகிய கைரேகை, முகம், கண் விழித்திரை போன்றவற்றை பயன்படுத்தி சாதனங்களின் உரிமையாளரை அடையாளங்காண்பதற்குரிய தொழிலை மேற்கொள்கின்றன.

இத்தகைய உள்ளீட்டுச் சாதனங்கள் மூலம் சாதனங்களின் தரவுகள் திருடப்படுவது முடியுமானளவு குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நவீன உள்ளீட்டு சாதனங்கள்
Speech recognition, Gesture control, Virtual reality controllers போன்றவை எதிர்கால தொழில்நுட்பத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

உள்ளீட்டு சாதனங்களின் நன்மைகள்

  1. மனிதனுக்கும் கணினிக்கும் இடையே எளிய தொடர்பை ஏற்படுத்துகின்றன.
  2. நவீன உள்ளீட்டு சாதனங்கள் கணினியில் நாம் செய்யக்கூடிய வேலைகளின் வேகத்தை அதிகரிக்கின்றன.
  3. முடியுமானளவு துல்லியமான தரவு, தகவல் போன்றவற்றை உள்ளிட பயன்படுகின்றன.

உள்ளீட்டு சாதனங்களின் குறைகள்

  1. சில நவீன உள்ளீட்டுச் சாதனங்கள் விலை உயர்ந்தவையாகக் காணப்படுவதனால் எல்லோரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
  2. தவறான பயன்பாட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.
  3. தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே மேற்படி நோக்கும்போது உள்ளீட்டு சாதனங்களின் வளர்ச்சியானது எமது நேரத்தை மீதமாக்குவதுடன் எமக்கும் கணினிக்கும் இடையிலான தொடர்பை அதிகரிக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது. மேலும் எமது வாழ்க்கையை மேலும் இலகுவாக்குகிறது எனலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *