கணினி வன்பொருள்(Computer Hardware)
இன்றைய டிஜிட்டல் உலகில் கணினி இல்லாமல் மனித வாழ்க்கையை கற்பனை செய்வது கடினமான ஒன்றாக மாறிவிட்டது.
கணினி சரியாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய வன்பொருள்(Hardware) பகுதிகளாகும்.
இப் பதிவில், கணினி வன்பொருள் என்றால் என்ன, அதன் வகைகள், பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.
கணினி வன்பொருள் என்றால் என்ன?
கணினியின் உடல் கூறுகள் அனைத்தும் வன்பொருள்(Hardware) என அழைக்கப்படுகின்றன.
எங்களால் பார்க்கவும் தொடவும் முடியுமான அனைத்து பகுதிகளும் வன்பொருள் ஆகும்.
கணினி வன்பொருள் வகைகள்
உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices)
கணினியில் தரவுகள் மற்றும் தகவல்களை உள்ளிட பயன்படும் சாதனங்கள் உள்ளீட்டு சாதனங்கள் ஆகும்.
உதாரணங்கள்:
- விசைப்பலகை (Keyboard)
- சுட்டி (Mouse)
- வருடி (Scanner)
- வலைக்கமரா (Web camera)
வெளியீட்டு சாதனங்கள் (Output Devices)
கணினியினால் முறைவழிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற பயன்படும் சாதனங்கள் வெளியீட்டு சாதனங்கள் ஆகும்.
உதாரணங்கள்:
- தெரிவிப்பி (Monitor)
- அச்சுப்பொறி (Printer)
- ஒலிபெருக்கி (Speaker)
- பல்ல}டக எறிவை (Multimedia Projectior)
முறைவழியாக்க சாதனங்கள் (Processing Devices)
கணினியின் முக்கியமான பகுதி CPU (Central Processing Device) ஆகும். கணினியில் உள்ளிடப்படும் தரவுகளை முறைவழிப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்கிறது.
இதன் பகுதிகள்:
- எண்கணித, தருக்க அலகு (ALU)
- கட்டுப்பாட்டு அலகு (Control Unit)
- நினைவகப் பதிவகம் (Memory Register)
சேமிப்பு சாதனங்கள் (Storage Devices)
தகவல்களை சேமிக்க பயன்படும் சாதனங்கள் சேமிப்பு சாதனங்கள் அல்லது தேக்ககச் சாதனங்கள் எனப்படும்.
உதாரணங்கள் –
1. வன்வட்டு (Hard Disk)
2. பேனாச் செலுத்தி (Pendrive)
3. நினைவக அட்டை (Memory Card)
4. இறுவட்டு (CD)
கணினி வன்பொருளின் முக்கியத்துவம்
- கணினியின் செயற்திறனை மேம்படுத்துதல்.
- வேகமான தரவு செயலாக்கத்தை வழங்குதல்.
- தரவு மற்றும் தகவல்களை நீண்ட காலம் சேமித்து வைக்கப் பயன்படும்.
- பல்வேறு வகையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது
எனவே மேற்படி நோக்கும்போது கணினி வன்பொருள் என்பது கணினியின் அடிப்படையாகும்.
வன்பொருள் பற்றி தெளிவாக அறிந்துகொள்வது, கணினியை சிறப்பாக பயன்படுத்தவும், கணினிப் பாகங்களில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது பழுதுகள் ஏற்படும்போது அவற்றை சரி செய்வதற்கான திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.

Leave a Reply