கணிணியை இனங்காண்போம்

கணினி என்பது தரவுகளை (Data) பெற்றுக் கொண்டு அவற்றை முறைவழிப்படுத்தி (Processing) பயனுள்ள தகவல்களாக (Information) மாற்றும் ஒரு இலத்திரனியல் சாதனம் ஆகும்.

இது மனிதனின் சிந்தனை மற்றும் கணக்கீட்டு திறனை ஆதரித்து, வேகமாகவும் துல்லியமாகவும் பணிகளை நிறைவேற்ற உதவுகிறது.
இன்றைய நவீன உலகம் முழுவதும் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

கல்வித் துறையில் பாடங்கள் கற்பதற்கும், நிகழ்நிலை பரீட்சைகள் எழுதுவதற்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது. வணிகத் துறையில் கணக்குப் பதிவு, வாடிக்கையாளர் மேலாண்மை, Onlinw விற்பனை போன்ற செயல்களில் கணினி முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், மருத்துவத் துறையில் நோயாளி தகவல் சேமிப்பு, பரிசோதனை முடிவுகள் ஆய்வு, தொலை மருத்துவ சேவை போன்றவற்றிலும் கணினி பயன்படுகிறது.

அரசு அலுவலகங்களில் பதிவுகள் பராமரிப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற பணிகளும் கணினி மூலம் எளிதாக நடைபெறுகின்றன.

கணினி மனித வாழ்க்கையை எளிமைப்படுத்திய ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடித்தளமாக கணினி திகழ்கிறது. எனவே, கணினியின் அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாகும்.

1 thought on “கணிணியை இனங்காண்போம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top