Tag: What is computer in tamil

  • கணினி என்றால் என்ன?

    கணினி என்றால் என்ன?

    கணினி கணினி என்றால் என்ன?

    இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கையை மிக அதிகமாக மாற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு கணினி ஆகும். இப்பதிவில் கணினி என்றால் என்ன? என்பதைப்பற்றிக் கற்போம்.

    கல்வி, வணிகம், மருத்துவம், தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகளிலும் கணினி இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.

    ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடினமான கணக்கீடுகளை சில விநாடிகளில் செய்து முடிக்கும் திறன் கணினிக்குள்ளது.

    What is computer? கணினி என்றால் என்ன?

    கணினி என்பது மனிதன் வழங்கும் தரவுகளை (Data) பெற்றுக் கொண்டு, அவற்றை முறைவழிப்படுத்தி (Process), தேவையான வெளியீடுகளை (Output) வழங்கும் ஒரு இலத்திரனியல் சாதனம் ஆகும்.

    கணினியின் தொழில்கள் மூன்று முக்கிய கட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலில் உள்ளீடு, அடுத்ததாக செயலாக்கம், இறுதியாக வெளியீடு. இந்த செயல்பாடுகள் அனைத்தையும் CPU எனப்படும் மைய முறைவழி அலகு ஒருங்கிணைக்கிறது.

    கணினியில் பல முக்கிய பகுதிகள் உள்ளன. அதில் Central Processing Unit (CPU) கணினியின் மூளையாக செயல்படுகிறது.

    நினைவகம் (Memory) தரவுகளை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் சேமிக்க உதவுகிறது.

    விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீடு சாதனங்கள் ஆகும். திரை, அச்சுப்பொறி போன்றவை வெளியீடு சாதனங்கள் ஆகும்.

    வன்வட்டு, பேனாச் செலுத்தி(Pen Drive) போன்றவை தரவுகளை நீண்ட காலம் சேமிக்க பயன்படுத்தப்படும் சேமிப்பு அல்லது தேக்ககச் சாதனங்கள் ஆகும்.

    அளவு மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் கணினிகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

    1. சூப்பர் கணினிகள்(Super Computers); மிகப்பெரிய அறிவியல் கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

    2. மெயின்ஃபிரேம் கணினிகள்(Mainframe Computers) வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களில் பயன்படுகின்றன.

    3. டெஸ்க்டாப்(Destop), லேப்டாப் போன்றவை பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் கணினிகள் ஆகும்.

    கணினியின் பயன்பாடுகள் எண்ணற்றவை.
    கல்வித் துறையில் நிகழ்நிலை(Online) கற்றல் மற்றும் பரீட்சை வினாக்களைத் தயாரித்தல், காணொளிகளைக் காட்சிப்படுத்திக் கற்பித்தலில் ஈடுபடல் போன்றவற்றிற்கு அதிகமாக கணினி பயன்படுத்தப்படுகிறது.

    வணிகத் துறையில் கணக்குப்பதிவு மற்றும் மேலாண்மை பணிகளுக்காக கணினிகள் உதவுகின்றன.

    மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிதல் மற்றும் மருத்துவ அறிக்கைகளைத் தயாரிக்க பயன்படுகிறது.

    தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு துறைகளிலும் கணினி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதன்படி கணினி, மனித வாழ்க்கையை எளிதாக்கிய ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு ஆகும். சரியான முறையில் பயன்படுத்தினால், கணினி நம் அறிவையும் திறமையையும் வளர்க்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.