கணினி அறிமுகம்

உள்ளடக்கம்
கணினி என்றால் என்ன?
கணினியின் முக்கிய செயல்கள்
கணினியின் பகுதிகள்
நன்மைகள் & தீமைகள்
MCQ வினாக்கள்
FAQ
கணினி என்பது மிக முக்கியமான இலத்திரனியல் சாதனமாகும். கல்வி, மருத்துவம், வங்கி, அலுவலகம், வணிகம் போன்ற பல துறைகளில் கணினி பயன்படுத்தப்படுகிறது.
கணினி என்றால் என்ன?
கணினி என்பது தரவுகளை (Data) பெற்றுக்கொண்டு அவற்றை முறைவழிப்படுத்தி (Processing) தகவல்களாக (Information) மாற்றும் இலத்திரனியல் சாதனமாகும்.
கணினியின் முக்கிய செயல்கள்

கணினியின் கூறுகள்
தெரிவிப்பி (Monitor)
தகவல்களை திரையில் காட்டும் வெளியீட்டு சாதனம்.
சாவிப்பலகை (Keyboard)
எழுத்துகள் மற்றும் எண்களை உள்ளிட பயன்படும் உள்ளீட்டு சாதனம்.
சுட்டி (Mouse)
திரையில் உள்ளவற்றை தெரிவு செய்ய உதவுகிறது.
மையமுறைவழியலகு(CPU)
கணினியின் மூளை என அழைக்கப்படும் இச்சாதனம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.
ஒலிபெருக்கி(Speakers)
ஒலியை வெளியிட பயன்படுகிறது.
கணினியின் பயன்பாடுகள்
கல்வித்துறை, மருத்துவத்துறை, வங்கித்துறை போன்றவற்றிலும் அலுவலகங்களிலும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
கணினியின் நன்மைகள்
- வேகமாக செயல்படும்
- தகவலை சேமிக்கும்
- நேரத்தை மிச்சப்படுத்தும்
- கணக்கீடுகளை துல்லியமாக செய்யும்
- இணைய வசதி வழங்கும்
கணினியின் குறைகள்
- மின்சாரம் தேவை
- வைரஸ் தாக்கம் ஏற்படலாம்
- அதிக நேரம் பயன்படுத்தினால் உடல்நல பாதிப்பு
- இணைய அடிமைத்தனம் ஏற்படலாம்

செயற்பாடு
உமது வீடு அல்லது பாடசாலையில் கணினி பயன்படுத்தப்படும் 5 இடங்களை எழுதுக.
- கணினியின் மூளை எது?
சுட்டி (Mouse)
சாவிப்பலகை (Keyboard)
மையமுறைவழியலகு (CPU)
தெரிவிப்பி (Monitor) - பின்வருவனவற்றில் உள்ளீட்டு சாதனம் எது?
ஒலிபெருக்கி (Speaker)
தெரிவிப்பி (Monitor)
சாவிப்பலகை (Keyboard)
அச்சுப்பொறி (Printer) - தகவலை திரையில் காட்டும் சாதனம் எது?
மையமுறைவழியலகு (CPU)
சுட்டி (Mouse)
தெரிவிப்பி (Monitor)
வருடி (Scanner) - ஒலியை வெளியிடும் சாதனம் எது?
ஒலிபெருக்கி (Speaker)
சாவிப்பலகை (Keyboard)
சுட்டி (Mouse)
மையமுறைவழியலகு (CPU))
குறு வினாக்கள்
கணினி என்றால் என்ன?
CPU என்பதன் வேலை என்ன?
இரண்டு உள்ளீட்டு சாதனங்களை குறிப்பிடுக.
கணினியின் இரண்டு பயன்பாடுகளை எழுதுக.
Monitor எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
📌 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- கணினி என்றால் என்ன?
கணினி என்பது தகவல்களை முறைவழிப்படுத்தும் இலத்திரனியல் சாதனமாகும். - CPU என்பதன் முழுப்பெயர் என்ன?
Central Processing Unit - Keyboaard எவ்வகை சாதனம்?
உள்ளீட்டு சாதனம். - Monitor எவ்வகை சாதனம்?
வெளியீட்டு சாதனம்.
